Thursday, January 1, 2009

ஜப்பானில் ரஜினி 2: சந்திரமுகி

நேற்றைய "ஜப்பானில் ரஜினி" என்ற பதிவிற்குப் பல அன்பர்களிடமிருந்து பலவிதமான கருத்துக்கள் வந்தன. கருத்துகளின் பதிலாக எழுதியவற்றைத் தொகுத்து ஒரு தனிப் பதிவாக இடலாமென நினைக்கின்றேன்.
ஒரு அன்பர், சென்ற பதிவில் இணைத்த Video clipஇன் முலம் ரஜினிக்கு ஜப்பானில் மிகுந்த popularity இருப்பதை உணரலாம் என்று குறிப்பிட்டிருந்தார். சென்ற பதிவில் நான் சொல்லவிரும்பியது, தமிழக பத்திரிகைகள் எழுதுமளவிற்கு ரஜினி ஜப்பானில் "Super star"ஆக இல்லை என்பதே.

ரஜினியின் "முத்து" ஜப்பானில் "Odoru maharaja" (Dancing king) (http://ja.wikipedia.org/wiki/ムトゥ_踊るマハラジャ) என்ற பெயரில் திரையிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. ஜப்பனிய மக்களில் பெரும்பாலானோர் "Odoru maharaja" என்ற பெயரிலேயே ரஜினியை நினைவுவைத்திருக்கின்றனர். ஆடல் பாடல் கொண்டாட்டமான ஒரு entertaining கலைஞராகவே ரஜினி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். "Super Star"ஆக அல்ல. முத்துவிற்குப் பின்னர் வெளிவந்த ரஜினியின் படங்கள் அதிகளவி
ல் பேசப்படவில்லை.நிச்சயமாக ஒரு குறிப்பிட்டளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரஜினியின் இரசிகர்களுக்கான website உம் உள்ளது!


மற்றொரு அன்பர், தமிழ்ப் பாடலைப் பிழையாகப் பாடுவது, தமிழையும் தமிழர்களையும் அவமதிப்பது போலாகும் என்று கோபப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் பாடிமுடித்ததும், தொகுப்பாளர் "இப்படி பிழை பிழையாக பாடுவது அவமதிப்பாகும்" என்று கூற, நகைச்சுவை நடிகரும் தலை தாழ்த்தி மன்னிப்புகோருகிறார்.
இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால், நகைச்சுவையாக மட்டும் பார்ப்போம். வேண்டுமென்றே தமிழ் மொழியை அவமதித்ததாக கருதத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.ஜப்பானில் தமிழ் மொழி சரியான முறையில் recognizeஆகி உள்ளதென்றே கருதுகிறேன். ஜப்பான் மொழியின் மூலம்(root) தமிழாக இருக்கலாம் என்ற கருத்தை(concept) முன்வைத்து, காலஞ்சென்ற Prof. Susumu Oono அவர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்துள்ளார். (பிறிதொரு பதிவில் இந்த ஆராய்ச்சி பற்றி விபரமாக எழுதுகிறேன்.) யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியை Dr. மனோன்மணி சண்முகதாசும் இது தொடர்பான ஆராய்ச்சியை 
மேற்கொண்டுள்ளார்.

பல ஜப்பானிய மக்கள் இந்த ஆராய்ச்சிபற்றி அறிந்துள்
ளனர்.

திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தைப் பற்றி ஜப்பானிய மொழியில் ஆராயும் ஜப்பானிய மாணவர்களை நான் அறிவேன். எனவே, தமிழ் மொழி அவமதிக்கப்பட்டதாகக் கருதத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

திருக்குறள்:
எட்டுத்தொகை:

இறுதியாக, ரஜினியின் சந்திரமுகி படத்தின் ஜப்பானிய மொழி ட்ரைலெர் ஐ இணைக்கிறேன். இரசிகர்களும்/இரசிகர் அல்லாதோரும் கண்டு களி/ழிக்கலாம்!

No comments:

Post a Comment