Wednesday, December 31, 2008

பாலஸ்தீனம் 380, உகண்டா 400, இலங்கை ...

ஏதோ test match score மாதிரி சாவுக்கணக்குச் சொல்கிறார்கள். ஒவ்வொரு இழப்பிற்குப் பின்னால் எவ்வளவு கண்ணீர், எவ்வளவு வேதனை...
தாயை இழந்த குழந்தைகள், மழலையைப் பறிகொடுத்த தாய்...
கையிழந்து, காலிழந்து வலியால் துடிக்கும் சிறுவர்கள்...
ஏதிலிகளாக நாடு விட்டு நாடு ஓடும் அப்பாவி மக்கள்.

பிறந்த இடமும், வளர்ந்த விதமும் வெவ்வேறாக இருப்பினும், எனக்கு அவர்களை சகோதர்களாகவே நினைக்கத்தோன்றுகிறது.

1994 ஜனவரி 1. கல்லூரி ஆசிரியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லச் சென்றுகொண்டிருக்கிறேன். யாழ் பெரியாஸ்பத்திரிக்கு அண்மையாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென போர்விமானங்கள். வீதியோரமாய் ஒதுங்கி நின்றேன். மிக அண்மையாக கேட்ட பெரும் வெடியோசையில் காதிரண்டும் அடைத்துக்கொண்டது போன்றதொரு உணர்வு.


ஆஸ்பத்திரியடிக்கு விரைந்தேன். சில நிமிடங்களில், ஈருருளிகளில் காயமடைந்தோர்கள் காவிவரப்பட்டனர். யாழ்ப்பாணம் பெரிய கோயிலில், புத்தாண்டு பிரார்த்தனையில் கூடியிருந்தவர்கள் இலக்கானார்கள்.

"ஐயோ, என்ர குழந்தை..."
கைகளால் வழியும் இரத்தத்தைப் பொருட்படுத்தாது தன் தலையில் அடித்துக் கதறியழும் தாய்...
மூன்று மாத பச்சிழங் குழந்தையாம்.

ஒரு கையும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு, நினைவிழந்திருந்தது அந்தக் குழந்தை.


மயங்கி விழப்போன அந்தத் தாயை தாங்கிக்கொண்டேன்.


"ஒரு குறையில்லாமல் பிறந்த என்ர செல்லம், இனி காலம் முழுக்க கைகாலில்லாமல் வாழவேணுமே...ஐயோ, நான் என்ன பாவம் பண்ணினனோ... கடவுள் என்ர கையை காலை எடுத்திட்டு, என்ர பிள்ளையை விட்டிருக்கக்கூடாதே..."

எதுவுமே கூறமுடியாமல் விக்கித்து நின்றேன்.

என் முகத்தை தன் கைகளால் தடவி, "தம்பி, என்ர பிள்ள என்னையா பாவம் பண்ணிச்சுது?"
கதறிக்கதறி அழும் அந்தத் தாயை தாங்கிப்பிடித்தபடி, ஸ்தம்பித்து நின்றேன்.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அந்தத் தாயின் கேள்வி நினைவில் வரும்.
இன்றுவரை பதில் தெரியவில்லை.
"தம்பி, என்ர பிள்ள என்னையா பாவம் பண்ணிச்சுது?"

http://news.bbc.co.uk/1/hi/world/africa/7804470.stm

More than 400 people have been killed by Ugandan rebels in the Democratic Republic of Congo in attacks since Christmas day, aid agency Caritas says.
The head of Caritas in DR Congo told the BBC some 20,000 people had fled to the mountains from the rebels, who have denied carrying out the attacks.




Photos:








2 comments:

krishnav said...

OH BAD THOSE DAYS ARE NOT A NEW YEAR ITS DEAD YEAR

அரிஞ்சயன் said...

Dear krishnav,

உண்மைதான்...

போரால் துன்பப்படும் குழந்தைகளுக்கு விரைவில் உரிமையும், அமைதியும் கிடைக்க முயற்சிப்போம்.

Post a Comment