Friday, January 2, 2009

பாலஸ்தீனம் நகுபா Nakba 1948

பா.ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் ரத்தம்" தொடரை வாசித்தவர்களுக்கு பாலஸ்தீன பிரச்சனையின் அடிப்படை புரியுமென்று நினைக்கிறேன்.

1948இல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த வீடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, பாலஸ்தீன மக்கள் Nakba(பெரும் துயரம்) என குறிப்பிடுகின்றனர். அன்றிலிருந்து அவர்கள் 60 வருடங்களாக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.

ஜப்பானைச் சேர்ந்த Ryuichi Hirokawaஎன்கின்ற Photo-journalist, கடந்த 40 வருடங்களாக பாலஸ்தீன பிரச்சனையை பின்தொடர்ந்துவருகிறார். 1982இல், லெபனான் அகதிமுகாமில் நடந்த படுகொலைப் (Genocide) பதிவுசெய்த இவரது படஆவணம், ஐநா சபையின் விசாரணைகளின்போது பிரதான சாட்சி ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!

Nakbaவின் 60வருட நினைவை முன்னிட்டு, கடந்த 40வருடங்களாக பதிவுசெய்த சம்பவங்களை, 30DVDகளைக் கொண்ட மிகநீண்ட ஆவணமாகவும், 130நிமிடங்களைக் கொண்ட ஆவணப் படமாகவும் வெளியிட்டுள்ளார். இது பாலஸ்தீன மக்களின் மூன்று தலைமுறையைப் பதிவுசெய்துள்ள முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

அழிக்கப்பட்ட வீட்டின் சாவியை 60 ஆண்டுகளாகப் பாதுகாத்துவரும் முதியவர், காணாமல் போன மகனின் படத்தைக் கட்டியணைத்தபடி மகனின் வரவிற்காய் காத்திருக்கும் தாய், யசீர் அரபாத் அவர்களின் PLOஇல் இணைந்து, இசுரேல் படையிடம் கைதாகி, சிறையில் நெடுங்காலம் சித்திரவதைப்பட்டு, NGO களின் பெரும் முயற்சியால் விடுவிக்கப்பட்ட இளம்பெண்...

பாதிக்கப்பட்ட மக்களின் பல பரிமாணங்களை பதிவுசெய்திருக்கும் அருமையான ஆவணம். English / French subtitles உடன் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் வெளியிடப்படவுள்ளது.

Japanese subtitlesஉடனான Trailerஐ இங்கு இணைக்கிறேன்.
மொழி புரியாவிடினும், வலி புரியும்.



Nakbaபற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Nakba_Day
http://www.alnakba.org/



மொழியும் மதமும் வேறானலும், வாழ்வும் வலியும் ஒன்றே.இலங்கை தமிழ்பேசும் மக்களின் வலிகளைப் பதிவுசெய்யவும் யாரேனும் முன்வருவார்களா...?

No comments:

Post a Comment