Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Saturday, January 3, 2009

ஜப்பானில் ரஜினி 3: "ஒருவன் ஒருவன் முதலாளி"

கடந்த பதிவொன்றில், "முத்து" திரப்படம், ஜப்பானில் "Odoru maharaja" (Dancing king) (http://ja.wikipedia.org/wiki/ムトゥ_踊るマハラジャ) என்ற பெயரில் திரையிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது எனக்குறிப்பிட்டிருந்தேன்.

அப்போது, "ஒருவன் ஒருவன் முதலாளி" மற்றும் "தில்லானா தில்லானா" பாடல்கள் பிரபல்யமாயின.

ஜப்பானிய தொலைக்காட்சியில், 30வருடங்களாக வாரம் ஒருமுறை (என்று நினைக்கிறேன்) "Abarenbo Shogun" (Tough/rough General) என்றொரு தொலைக்காட்சிதொடர் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, நகைசுவையும், கொஞ்சம் சமூக நீதியும் கலந்த பொழுதுபோக்குத் தொடராக உள்ளது. (இதில், Shogun வாளைச் சுழற்றினால் 10 பேர் பறந்துபோய் விழுவார்கள்!)

"ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் பின்ணணியில் ஒலிக்க, Shogunவாளைச் சுழற்றும் காட்சியை கண்டு களியுங்கள்!

(இது, யாரோஒருவர் குறும்புகாக தொகுத்த clip. தொலைக்காட்சித் தொடரில் பயன்படுத்தப்படவில்லை!)

Thursday, January 1, 2009

ஜப்பானில் ரஜினி 2: சந்திரமுகி

நேற்றைய "ஜப்பானில் ரஜினி" என்ற பதிவிற்குப் பல அன்பர்களிடமிருந்து பலவிதமான கருத்துக்கள் வந்தன. கருத்துகளின் பதிலாக எழுதியவற்றைத் தொகுத்து ஒரு தனிப் பதிவாக இடலாமென நினைக்கின்றேன்.
ஒரு அன்பர், சென்ற பதிவில் இணைத்த Video clipஇன் முலம் ரஜினிக்கு ஜப்பானில் மிகுந்த popularity இருப்பதை உணரலாம் என்று குறிப்பிட்டிருந்தார். சென்ற பதிவில் நான் சொல்லவிரும்பியது, தமிழக பத்திரிகைகள் எழுதுமளவிற்கு ரஜினி ஜப்பானில் "Super star"ஆக இல்லை என்பதே.

ரஜினியின் "முத்து" ஜப்பானில் "Odoru maharaja" (Dancing king) (http://ja.wikipedia.org/wiki/ムトゥ_踊るマハラジャ) என்ற பெயரில் திரையிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. ஜப்பனிய மக்களில் பெரும்பாலானோர் "Odoru maharaja" என்ற பெயரிலேயே ரஜினியை நினைவுவைத்திருக்கின்றனர். ஆடல் பாடல் கொண்டாட்டமான ஒரு entertaining கலைஞராகவே ரஜினி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். "Super Star"ஆக அல்ல. முத்துவிற்குப் பின்னர் வெளிவந்த ரஜினியின் படங்கள் அதிகளவி
ல் பேசப்படவில்லை.நிச்சயமாக ஒரு குறிப்பிட்டளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரஜினியின் இரசிகர்களுக்கான website உம் உள்ளது!


மற்றொரு அன்பர், தமிழ்ப் பாடலைப் பிழையாகப் பாடுவது, தமிழையும் தமிழர்களையும் அவமதிப்பது போலாகும் என்று கோபப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் பாடிமுடித்ததும், தொகுப்பாளர் "இப்படி பிழை பிழையாக பாடுவது அவமதிப்பாகும்" என்று கூற, நகைச்சுவை நடிகரும் தலை தாழ்த்தி மன்னிப்புகோருகிறார்.
இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால், நகைச்சுவையாக மட்டும் பார்ப்போம். வேண்டுமென்றே தமிழ் மொழியை அவமதித்ததாக கருதத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.ஜப்பானில் தமிழ் மொழி சரியான முறையில் recognizeஆகி உள்ளதென்றே கருதுகிறேன். ஜப்பான் மொழியின் மூலம்(root) தமிழாக இருக்கலாம் என்ற கருத்தை(concept) முன்வைத்து, காலஞ்சென்ற Prof. Susumu Oono அவர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்துள்ளார். (பிறிதொரு பதிவில் இந்த ஆராய்ச்சி பற்றி விபரமாக எழுதுகிறேன்.) யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியை Dr. மனோன்மணி சண்முகதாசும் இது தொடர்பான ஆராய்ச்சியை 
மேற்கொண்டுள்ளார்.

பல ஜப்பானிய மக்கள் இந்த ஆராய்ச்சிபற்றி அறிந்துள்
ளனர்.

திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தைப் பற்றி ஜப்பானிய மொழியில் ஆராயும் ஜப்பானிய மாணவர்களை நான் அறிவேன். எனவே, தமிழ் மொழி அவமதிக்கப்பட்டதாகக் கருதத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

திருக்குறள்:
எட்டுத்தொகை:

இறுதியாக, ரஜினியின் சந்திரமுகி படத்தின் ஜப்பானிய மொழி ட்ரைலெர் ஐ இணைக்கிறேன். இரசிகர்களும்/இரசிகர் அல்லாதோரும் கண்டு களி/ழிக்கலாம்!

Wednesday, December 31, 2008

ஜப்பானில் ரஜினி

ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரும் வரவேற்பு இருப்பதான தோற்றப்பாடு தமிழ்நாட்டு பத்திரிகைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை அப்படியாக இல்லை. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன், "முத்து" திரைப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது உண்மை. ஜப்பானில் இடையிடையே சில "Boom" உருவாகும். உடனடியாக மறைந்துவிடும். "முத்து"விற்குப்பின், ரஜினியின் ஏனைய படங்கள் பெரிய திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. சிலநூறு ஜப்பானிய இரசிகர்களுக்காக வாடகைத் திரையரங்குகளில் சில காட்சிகள் திரையிடப்பட்டன.

எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலான ஜப்பானிய மக்கள் ரஜினியை காமெடி நடிகர் என்றே நினைத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதிகளவில் "மிமிக்றி" செய்து கிண்டலடிகப்படும் இந்திய நடிகர் ரஜினி என்றே நினைக்கிறேன்.

நேற்றைய தொலைக்காட்சி நிகழ்வு: